நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தலைப்புச் செய்திகள்!

டெல்லியில் விவசாயிகள் போராட்ட கள நிலவரம்:
05-1491373495-protஇன்றுடன் 23வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. நேற்று விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினர். இது பெரும்பாலோனோரின் கவனத்தை ஈர்த்தது. கூட்டுறவு சங்கங்களில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாலும், காவிரி மேலாண்மை வாரியம், வறட்சி நிதி என பல கோரிக்கைகளுடன் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு:
05-1491374035-parlimentநடந்துமுடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விவாதிக்க அனுமதி கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக இந்திரா பானர்ஜி:
05-1491372390-laneசென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்று கொண்டுள்ளார். ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *