முழு அடைப்பு போராட்டத்தால் தலைகீழான தமிழகம்… அரசியல் தலைவர்கள் கைது!

விவசாயப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாத மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சென்னை, சேலம்…

விவசாயப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாத மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சென்னை, சேலம், கோவை, ஈரோடு, ஓசூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டத்தில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட விடாத வண்ணம் பல பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளன்னர். மாநிலத்தின் முக்கிய நகர்களில் முழு கடையடைப்பு நிகழ்வதால், அங்கு பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், டாக்சிகள் எதுவுமே இயக்கப்படவில்லை. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. விவசாயிகளுக்கான நீதி காக்கப்பட வேண்டுமென முன்னெடுத்துள்ள இப்போராட்டத்தை வணிகர்களும், மக்களும் மனப்பூர்வமாக ஆதரித்துள்ளனர். லாரி, ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், தொழிலாளர் சங்கங்கள் அனைத்தும் இப்போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை; தமிழக அரசுப் பேருந்துகள் மட்டும் பரவலாக இயக்கப்படுகின்றன.

bharat-bandh1

பொது மக்களுடைய போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தங்களது போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

திருச்சி பேருந்து நிலையத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சாலை மறியல் நடந்துகொண்டிருக்கிறது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கே.என்.நேருவும் கைதாகியுள்ளார்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *