ஆற்று மணலை விட உறுதியானது செயற்கை மணல்.. விலையும் மிக குறைவு!

செயற்கை மணல் எப்படியான தன்மைகளை கொண்டுள்ளது? இதன் விலை, தரம் மற்றும் பயன்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்

மிழகத்தில் பாயும் காவிரி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளின் படுகைகளில் பல்லாயிரம் டன் கணக்கில் இயற்கை மணல் அள்ளப்பட்டுவிட்டது. அதை விட கூடுதலான அளவில் மணல் கொள்ளையடிக்கப்பட்டது. இப்போது தமிழகம் முழுக்க மணலுக்கு அதிக தேவை எழுந்துள்ளது; ஆனால் மணல் அள்ளத்தான் இடமில்லை. மணலை அள்ளி அள்ளி ஆறுகளையும், குளங்களையும் சர்வ நாசம் செய்தாயிற்று. இயற்கையான நிலத்தடி நீரை ஒழித்துவிட்டு கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்திக் கொண்டிருப்பதை போல, ஆற்று மணலுக்கு மாற்று மணலாக செயற்கையாக தயாரிக்கப்பட்ட மணலை, அதாவது Manufacturing Sand வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த செயற்கை மணல் எப்படியான தன்மைகளை கொண்டுள்ளது? இதன் விலை, தரம் மற்றும் பயன்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்…

தயாரிக்கப்பட்ட அல்லது செயற்கை மணல் என்பது கடந்த சில ஆண்டுகளில் அறிமுகமாகி, பல பகுதிகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இரும்பு, சிமென்ட் போன்றவற்றின் தயாரிப்பை போலவே செயற்கை மணலின் தயாரிப்பும் இருப்பதால், இதன் விலை இயற்கை மணலை விட 50% குறைவுதான். செயற்கை மணல் தயாரிக்கும் குவாரிகள் கோவை மாவட்டத்தின் சூலூர், சிறுமுகை, பெரிய குயிலி, செட்டிப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, உடுமலை ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன. இந்த குவாரிகளில் பாறைகள் அணுவாகப் பிளக்கப்பட்டே செயற்கை மணல் உருவாக்கப்படுகிறது. இதனால்தான் ஆற்று மணலைப் போல, செயற்கை மணலின் நிறம் வெண்மையாக இருப்பதில்லை; சாம்பல் நிறத்தில் இருக்கிறது.

msand-by-stona-sand

செயற்கை மணலானது ஆற்று மணலை விட வலிமையானது, சுத்தமானது என பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆற்று மணலை இரண்டு முறைகளுக்கு மேல் சலித்து, மாசுக்கள் மற்றும் கற்களை அகற்றிய பின்புதான் கட்டிட வேலைப்பாடுகளுக்கு பயன்படுத்த இயலும். ஆனால் செயற்கையாக தயாரிக்கப்பட்ட மணலில் மாசுகள், கற்கள் போன்ற கலப்படங்கள் இருக்காது. நைஸாக இருக்கும். செயற்கை மணல் தரமான முறைகளில் தயாரிக்கப்படுவதால், அதன் மூலம் உருவாகும் கட்டுமானங்கள் உறுதியானவையாகவும், தரமானவையாகவும் நிலைக்கும். இதை ஐ.ஐ.டி, இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தினர் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

Prev Page 1 of 2Next

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *