ஜூன் 16 முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம்!

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாதம் இரண்டு முறை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் வரும் ஜூன் 16ம் தேதி முதல் தினசரி விலை நிர்ணயத்திற்கு ஏற்ப வசூல் செய்யப்படும்

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மாதம் இரண்டு முறை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி முதல் தினசரி விலை நிர்ணயத்திற்கு ஏற்ப வசூல் செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை முடிவு செய்துள்ளது. இதே அறிவிப்பை தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Lucknow: Heavy rush at a petrol pump after the demonetization of 500 and 1000 rupees notes in Lucknow on Wednesday. PTI Photo by Nand Kumar (PTI11_9_2016_000311A)
Lucknow: Heavy rush at a petrol pump after the demonetization of 500 and 1000 rupees notes in Lucknow on Wednesday. PTI Photo by Nand Kumar (PTI11_9_2016_000311A)

கடந்த மே 1ம் தேதி முதல் இவ்வாறான விலை நிர்ணயம் புதுச்சேரி, விசாகப்பட்டினம், ஜாம்ஷெட்பூர், சண்டிகர், உதய்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்படும்.

தங்கம், வெள்ளி விலைகள் சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தினம்தினம் மாறுவதைப் போல இனி கச்சா எண்ணெய் விலையும் தினமும் மாறுபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *